Sunday, 16 March 2014

மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன

மூங்கில் மரங்கள் அதிகமான சுவாசக்காற்றைத்தருகின்றன....



ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் எனக் கணக்கிட்டுள்ளது.
ஒரு மூங்கில் குத்து ஓர் ஆண்டில் 309 கிலோ உயிர்க் காற்றைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம் ஆக்சிஜனை வெளியிடுகிறது அதனால் மூங்கில் மரம் வளர்த்தால் அதிகமான ஆக்ஸிஜன் பெறலாம்....

Wednesday, 12 March 2014

மாற்று எரிசக்தி

தற்கால எரிசக்திகள்:

அனல் மின்சாரம்
அணு மின்சாரம்
நீர் மின்சாரம்

அனல் மின்சாரம்:
நிலகரி சுரங்கங்கள் எத்தனை சீர்கெடுகள்? நிலக்கரியை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடம் கொண்டு செல்ல எத்தனை அல்லல்கள்? மேலும் அனல் மின்நிலையம் தரும் சுற்று சூழல் பாதிப்புகள் எத்தனை எத்தனை?

அணு மின்சாரம்:
அணுச்சக்தி அபாயகரமானது. அணுக்கழிவுகள் புற்று நோயை கூட உண்டுபண்ண கூடும். அணு மின்நிலையம் வெடித்தோ அல்லது ஆழிபேராலை போற்ற இயற்கை அபாயங்களுக்கு உட்பட்டளோ என்னவாகும்?


நீர் மின்சாரம்:
நீரிலிருந்து தயாராகும் மின்சாரம் மட்டுமே பசுமைக்கு கொஞ்சம் அருகில் இருப்பது, அதனையும் மரங்களை வெட்டி சாய்த்து மழை பொலிவை தடுத்துவிட்டு, நீர் நிலைகள் அற்ற போன பின் எப்படி பெற போகிறோம் எரிசக்தியை?


Monday, 10 March 2014

மரம் வளர்ப்போம்


விவசாயம் நம்மால் கைவிடப்பட்ட பாரம்பரிய தொழில். இந்தியா ஒரு விவசாய நாடு என்ற நிலை மாறி நாம் பல்வேறு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வருகிறோம். உழவுக்கும் தொழிலுக்கு வந்தனம் செய்வோம் என்ற நிலை மாறி தொழில் மட்டுமே இன்று போற்றப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் மழை பொழிவு குறைந்துள்ளது. மண்வளம் சுரண்டப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் கூடிய விரைவில் நாம் உணவுக்கும் ஏன் குடி தண்ணீருக்கு கூட பிறரிடம் கையேந்தும் நிலை வரும்.

இதை எவ்வாறு தடுப்பது. மழை பெற முக்கிய காரணமான மரங்களை நாம் அழிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது தமிழ்நாட்டை பசுமை மிகு வனமாக ஆக்க வேண்டும். மரம் வளர்க்க வேண்டும்.

நாங்கள் கிராமத்துப் பட்டதாரிகள், கிராமத்து சுவையை உணர்ந்த நாங்கள் கிராமங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதற்படி, எங்கும் பசுமை . பசுமையை எங்கும் நிலை நிறுத்த மரங்களாய் மாறும் விதைகளின் (மாணவர்கள்) ஆணி வேருக்கு(நாளைய தலைவர்கள்), உரமாக வந்துள்ளோம்.


இந்த எண்ணத்தை நாங்கள் சிறுவர், சிறுமிரிடமிருந்து தொடங்க நினைக்கிறோம். தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளுக்கு சென்று மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், தற்கால சூழல் காரணமாக புவிக்கு வரும் பாதிப்பு, மழை பொழிவின் முக்கியத்துவம் எல்லாவற்றையும் எடுத்துரைக்கயுள்ளோம்.

விதைத்துளிர்

காலம் காலமாய் நம் மண்ணில் விளைந்த பொன்னை பகிர்ந்தோம் மகிழ்வித்தோம்!! இன்று தனி மனிதனுக்கும் இல்லை என்ற நிலை நாளை நிலை என்னவோ ??? எத்தனையோ வியர்வை துளிகளை நீராய் ஏற்று கொண்டது இந்த மண் ,, இன்றோ!!!! வியர்வை துளிக்கே பஞ்சம் ????? எங்கிருந்து பொழியும் மழை!!!!! சிந்திப்போம்..... செயல்படுவோம்.......



பூமி வெப்பத்தால், சுற்று சூழல் பராமறிக்கபடாத காரணத்தால் எத்தனை எத்தனையோ இயற்கை வளங்களை இழந்து வருகிறோம். வானம் பார்த்த பூமி நாம் மரங்களை அழித்ததால் மழையின்றி தவிக்கிறோம்.