விவசாயம் நம்மால் கைவிடப்பட்ட பாரம்பரிய தொழில். இந்தியா ஒரு விவசாய நாடு என்ற நிலை மாறி நாம் பல்வேறு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு வருகிறோம். உழவுக்கும் தொழிலுக்கு வந்தனம் செய்வோம் என்ற நிலை மாறி தொழில் மட்டுமே இன்று போற்றப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் தமிழ் நாட்டில் மழை பொழிவு குறைந்துள்ளது. மண்வளம் சுரண்டப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் கூடிய விரைவில் நாம் உணவுக்கும் ஏன் குடி தண்ணீருக்கு கூட பிறரிடம் கையேந்தும் நிலை வரும்.
இதை எவ்வாறு தடுப்பது. மழை பெற முக்கிய காரணமான மரங்களை நாம் அழிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது தமிழ்நாட்டை பசுமை மிகு வனமாக ஆக்க வேண்டும். மரம் வளர்க்க வேண்டும்.
நாங்கள் கிராமத்துப் பட்டதாரிகள், கிராமத்து சுவையை உணர்ந்த நாங்கள் கிராமங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நாங்கள் எடுத்து வைத்திருக்கும் முதற்படி, எங்கும் பசுமை . பசுமையை எங்கும் நிலை நிறுத்த மரங்களாய் மாறும் விதைகளின் (மாணவர்கள்) ஆணி வேருக்கு(நாளைய தலைவர்கள்), உரமாக வந்துள்ளோம்.
இந்த எண்ணத்தை நாங்கள் சிறுவர், சிறுமிரிடமிருந்து தொடங்க நினைக்கிறோம். தமிழ்நாட்டில் எல்லா பள்ளிகளுக்கு சென்று மரம் வளர்ப்பின் முக்கியத்துவம், தற்கால சூழல் காரணமாக புவிக்கு வரும் பாதிப்பு, மழை பொழிவின் முக்கியத்துவம் எல்லாவற்றையும் எடுத்துரைக்கயுள்ளோம்.
No comments:
Post a Comment